90 கிட்ஸ்களின் பேவரைட் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர், திரைப்பட ஆசிரியர், பாடலாசிரியர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். 2005 இல் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பின்னர் 2014ல் வெளியான சலீம் படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகம் ஆனார். அதன் பின்னர் 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து மிகச்சிறந்த நடிகராக பெயர் வாங்கித்தந்தது.
மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!
சமீபத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ திரைப்படம் வெளிவந்தது. நகைச்சுவை கலந்த காதல் கதை களத்தில் உருவான இந்த படத்தை விநாயக வைத்தியநாத இயக்கியுள்ளார். மேலும், முக்கியமான கதாபாத்திரத்தில் மிர்ணாளினி ரவி, விடிவி கணேஷ், இளவரசு என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க: பல பேருடன் தொடர்பு.. அதிக பண தேவை இருந்துச்சு; எமோஷனலாக பேசிய ரேஷ்மா பசுப்புலேட்டி..!
இந்நிலையில், விஜய் ஆண்டனி அவரது மகளின் இறப்பிற்கு பிறகு ஒரு விஷயத்தை செய்து வருகிறார். அதாவது, எங்கே வந்தாலும் காலில் செருப்பு இல்லாமல் நடந்து வருகிறார். இது குறித்து, அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசும்பொழுது செருப்பு போடாமல் இருப்பது மனதிற்கு அமைதியை தருகிறது. அது உடல் நலத்திற்கு நல்லது, நமக்குள் தன்னம்பிக்கை வளர்க்கிறது. நான் எப்போது செருப்பு இல்லாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அன்று முதல் எந்தவிதமான நெருக்கடியான சூழலிலும் எனக்கு வரவில்லை. வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்க விரும்புகிறேன். இது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது என்று பேசியுள்ளார்.
மேலும், விஜய் ஆண்டனி கிறிஸ்துவ கடவுளான இயேசுவை இழுத்து சர்ச்சையில் சிக்கினார். இப்போது, அடுத்த சர்ச்சையாக காலில் செருப்பு அணிவது பற்றிய பேசிய நிலையில், அது குறித்து மருத்துவர் பருக் அப்துல்லா விமர்சித்துள்ளது. சமீபகாலமாக விஜய் ஆண்டனி காலில் செருப்பு அணிவதில்லை காலில் செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள் அதோட அருமை தெரியும். உண்மையை சொல்றேன் ஒரு மாதம் செருப்பில்லாமல் நடந்து பார்த்தேன். அதன் பயன் தெரியும் என கூறியதாக போஸ்ட் ஒன்று இணையதளத்தில் உலா வருகிறது. இதை தனது, பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மருத்துவர் விழிப்புணர்வு தேவை என கூறி செருப்பு இல்லாமல் நடந்த சர்க்கரை நோயாளிகளுக்கு என்ன ஆனது என்பதை விளக்கமாக தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
This website uses cookies.