ஒரு காலத்தில் திரைப்படம் என்றாலே குடும்ப பாங்கான கதை, ஆக்சன் கதை, பீரியாடிக் பிலிம், கேங்ஸ்டர் கதை என இது போன்ற திரைப்படங்கள்தான் வெளிவரும்.பெரும்பாலும் திரைப்படங்களில் ஆபாச காட்சிகள் இடம்பெறாத அளவுக்கு திரைப்படத்தை பார்த்து பார்த்து எடுப்பார்கள்.
அப்படியும் தணிக்கை குழுவுக்கு சென்ற பிறகு அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பல ரொமான்டிக் காட்சிகளை கூட ஆபாசம் என சித்தரித்து விடுவார்களோ என்று அதை நீக்கி விடுவார்கள். ஆனால் தற்போது டெக்னாலஜி எங்கேயோ வளர்ந்து போயிடுச்சு.
“ப்ளூ ஃபிலிம் எடுப்பதற்கு நடிகர்… நடிகைகளே தேவையில்லை. முகம் மட்டும் இருந்தா போதும் அதை வைத்து மொத்தத்தையும் உருவாக்கிடலாம்”. அந்த அளவுக்கு இப்போது கிராபிக்ஸ் காட்சிகளில் மொத்தத்தையுமே கொண்டு வந்துடுறாங்க. அப்படி வெளிவந்த திரைப்படம் தான் “தி லைன் கிங்” இந்த திரைப்படத்தை எடுக்க காட்டுக்கே போயிருக்க மாட்டாங்க.
காட்டுக்கு போயிருந்தால் கூட அவ்வளவு தத்துரூபமா படத்தை எடுத்திருப்பாங்களான்னு தெரியாது. ரியல் சிங்கத்தை வச்சு படம் எடுத்த மாதிரி அவ்வளவு சூப்பரா எடுத்திருந்தாங்க. எனவே டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. இனி வரும் காலங்களில் சினிமாவிற்கு நடிகர் நடிகைகளே தேவையில்லை, செட்டிங்ஸ் தேவையில்லை…. எதுவுமே தேவையில்லை… மொத்த படத்தையும் க்ராபிக்ஸ்லே எடுத்து விடலாம் என டாக்டர் கந்தராஜ் அந்த பேட்டியில் பேசியிருந்தார்.