உருவ கேலி செய்த அஜித்?.. ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து டாப் சீக்ரெட்டை போட்டுடைத்த பிரபலம்..!

Author: Vignesh
22 February 2024, 11:11 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மலையாள திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்து இன்று தவிர்க்க முடியாக நடிகராக இருந்து வருகிறார். காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல அட்டகாசமான படங்களில் நடித்துள்ளார்.

vidamuyarchi

படத்திற்கு படம் தனது மாஸான நடிப்பை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்று அவரை ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் பைக் ரேஸ் , கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார். திரைப்படங்களில் நடித்துக்கொண்டே வேர்ல்டு டூர் சென்று வரும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரபலமான இயக்குனராக இருக்கும் முருகதாஸ் முதன் முதலில் அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கினார். முதல் படமே முருகதாஸுக்கு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. இதன்பின், ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி என தொடர் வெற்றிகளை கொடுத்து வந்தார்.

ajith-updatenews360

இந்த படங்களில், கஜினி படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது சூர்யா கிடையாது. அஜித் தான் கஜினி படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தார். முதலில் இப்படத்திற்கு மிரட்டல் என தலைப்பு வைத்தனர். அதன் பின், போட்டோ ஷூட் புகைப்படங்கள் கூட வெளியானது.

இந்நிலையில், கஜினி படத்தை இயக்குவதற்காக இயக்குனர் முருகதாஸ் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், இதை கேட்டவுடன் ஒரு கோடி பணத்தை முருகதாஸ் பக்கத்தில் வைத்துப் பாருங்கள் அந்த பணத்தைவிட அவர் உயரமாக இருந்தால், அந்த சம்பளத்தை அவருக்கே கொடுத்து விடுங்கள் என அஜித் கூறியதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

ajith-updatenews360

ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிரட்டல் படத்திற்கு பின்பு இரு முறை அஜித்தை வைத்து முருகதாஸ் படம் இயக்கியிருந்தார். ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. இப்படி ஒரு பேச்சைக் கேட்ட பிறகு எப்படி முருகதாஸால் அஜித்துடன் பேசிக்கொண்டு இயல்பாக இருக்க முடியும். அஜித் இப்படி கூறி இருந்தால், தனது வாழ்நாளில் அஜித்தை அவர் சந்தித்திருக்கவே மாட்டார். ஆனால், அதன்பின் பலமுறை அஜித்தை நேரில் முருகதாஸ் சந்தித்துள்ளார்.

  • Game Changer Shankar songs cost“கேம் சேஞ்சர்”பட பாடலுக்கு இத்தனை செலவா…கோடிகளை மட்டுமே குறிவைக்கும் சங்கர்..!
  • Views: - 295

    0

    0