ரஜினிக்கு இருக்கும் தைரியம் விஜய்க்கு இருக்கா? இவரெல்லாம் அரசியலில் தேறமாட்டார்!

Author: Rajesh
9 February 2024, 8:42 pm

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அண்மையில் “தமிழக வெற்றி கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் நடிகர் விஜய். மிக விரைவில் முழுநேர அரசியலிலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறியுள்ளார். தொடர்ந்து விஜய் தனது அரசியல் திட்டங்கள் குறித்து அடுத்தடுத்தது அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்திற்கு இருக்கும் தைரியம் விஜய்க்கு இருக்கா? என சமூகவலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ” என்ன ரஜினி பயந்து ஒதுங்கிட்டாரு விஜய் தைரியமா களத்தில் இறங்கிட்டாருனு எல்லாரும் பேசுறீங்க? ரஜினிக்கு இருக்கும் தைரியம் விஜய்க்கு இருக்கிறதா? ஜெயலலிதாவை நேரடியாக எதிர்த்து அவரது ஊழலை விமர்சித்தவர் ரஜினி. கலைஞர் விழாவில் அஜித், நடிகர்களை மிரட்டி வலுக்கட்டாயமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கிறார்கள் என கூறியதும் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், விஜய் தலைவா திரைப்படம் ரிலீஸ் போது வந்த பிரச்சனை ஜெயலலிதாவிற்கு கைகட்டி கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டவர் விஜய். அவர் இதுவரைக்கும் ஏதாவது ஒரு வார்த்தை எந்த அரசியல்வாதியையாவது எதிர்த்து பேசியிருப்பாரா? எதாவது மக்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டிருப்பாரா? இல்ல ஆதரவு தெரிவித்திருப்பாரா? இப்போ சமீப நாட்களாக தான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் மக்களுக்கு நலஉதவிகள் என்ற பெயரில் விளம்பரம் தேடிக்கொண்டார். இது எல்லாத்தையும் விட ரஜினிகாந்த் ஒரு முறை நான் அரசியலுக்கு வந்தால் நான் முதல்வர் ஆக மாட்டேன் நன்றாக படித்தவரை தான் முதல்வர் ஆக்குவேன் என பெருந்தன்மையுடன் கூறினார். விஜய் அப்படி சொல்வரா? என ரஜினியின் தீவிர ரசிகர் சத்யன் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ