ஜாலியாக குத்துபோட்ட கீர்த்தி சுரேஷ்… திடீரென கடிக்க வந்த நாய்… வைரல் வீடியோ..!!

Author: Vignesh
14 September 2023, 6:30 pm

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

keerthy suresh - updatenews360

தமிழ், தெலுங்கு, மலையாள மொழியில் முன்னணி நடிகையாக தற்போது கீர்த்தி சுரேஷ் ஜொலித்து வருகிறார். இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறார். அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மாமன்னன் படத்தை தொடர்ந்து கண்ணிவெடி என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் இந்தியில் ரீமேக் செய்யவுள்ள தெறி படத்தில் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளாராம்.

keerthy suresh - updatenews360

இதனிடையே, ஜவான் படத்தில் இடம்பெறும் பாடலுக்கு பிரியா அட்லி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடனமாடியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் செல்லமாக கொஞ்ச நினைத்து அருகில் செல்ல அந்த நாய் அவரை கடிக்க வந்தது. உடனே அவர் பயந்து ஓடிவிட்டார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

  • Ajith Kumar Dubai car race victory அரங்கமே அதிர…ஒட்டுமொத்த உலகமே திரும்பி பார்க்க…மகனுடன் மேடையை பகிர்ந்த அஜித்..!