பாகுபலிக்கே பட்டை தீட்டப்போகும் சலார் 2 – பிரபாஸ் படத்தில் இணைந்த மார்வெல் நடிகர்!

Author:
11 November 2024, 3:05 pm

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் சலார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக முதல் பாகம் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளிவந்து எதிர் மாறாக இருந்தது.

ஆம், இந்த திரைப்படம் கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார் என்பதாலே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்த சமயத்தில் படம் வெளியாகி மோசமான கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

salaar 2

முதல் படம் தோல்வியை அடுத்து இரண்டாம் பாகமாக உருவாகி வரும் சலார் படத்தின் ரிலீஸ் அறிவிக்கவில்லை. இதனால் முதல் படத்தின் தோல்வியால் இரண்டாம் பாகம் வெளியிடப் போவதில்லை என செய்திகள் வெளியானது.

ஆனால் அதை படக்குழு மறுத்தது. சலார் படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் தற்போது ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்திருக்கிறது .

salaar 2

அதாவது இந்த திரைப்படத்தில் உலக சினிமா காரர்களின் எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது.இந்த திரைப்படத்தில் கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரமாண்டமா இயக்க நடிகர் பிரபாஸ் மற்றும் தென்கொரிய நடிகர் டான் லீ உள்ளிட்டோர் நடிக்கிறார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்திருப்பதால் சலார் 2 பாகுபலி வசூலையே பின்னுக்கு தள்ளிடுமோ என்ற ஒரு அச்சம் எழுந்துள்ளது.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!