தள்ளிப்போன சிவகார்த்திகேயனின் டான்…படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
Author: Rajesh2 March 2022, 11:36 am
கொரோனா இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிவர இருந்த பல படங்கள் அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்து வருவதைத் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அதன்படி விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’, விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, அஜித்தின் ‘வலிமை’ உள்ளிட்ட படங்கள் வரிசையாக ரிலீசாகி உள்ளன.
அடுத்து சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் மார்ச் 10-ம் தேதியும், பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம், மார்ச் 11-ம் தேதியும் வெளியாகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ‘டான்’ படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் லைகா நிறுவனமே கைப்பற்றியுள்ளது. ஆகையால் ஒரே தேதியில், ஒரு நிறுவனத்தின் இரண்டு படங்கள் வெளியானால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் என்பதால் டான் படம் மே 13-ல் தள்ளிபோவதாக கூறப்படுகிறது.