தனுஷ் கூட மட்டும் நடிக்காத…வாரிசு நடிகைக்கு தந்தை போட்ட கண்டிஷன்!
Author: Udayachandran RadhaKrishnan20 November 2024, 10:42 am
தமிழ் சினிமாவில் இயக்குநரின் மகன் என்ற பெயரில் நடிகர் தனுஷ் அறிமுகமானார். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.
இவர் முன்னணி நடிகராக ரஜினியும் ஒரு காரணம். அவர் மருமகன் என்ற இமேஜ் மூலம் பட வாய்ப்புகள் குவிந்தன. பின்னர் பவர் பாண்டி படம மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
தனுஷ் உடன் நடிக்க நடிகைக்கு தடை போட்ட தந்தை
தொடர்ந்து ராயன் படத்தை இயக்கி அவரே நடித்தார். இதைத்தொடர்ந்து நிலவுக்கு என்னடி என் மேல் கோபம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இட்லி கடை என்ற படத்தை இயக்கி அவரே நடித்தும் வருகிறார்.
பிஸியாக வலம் வரும் தனுஷ் உடன் நடிக்கக்கூடாது என நடிகைக்கு அவர் தந்தை கண்டிஷன் போட்டுள்ளதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: தெலுங்கு பட ரீமேக்தான் தளபதி 69 கதை… இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலா..!!
ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, நடிகை ஜான்வி கபூருக்கு அவரது தந்தையும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தனுஷ் படத்தில் நடிக்கக்கூடாது என கண்டிஷன் போட்டுள்ளாராம்.
ஒரு வேளை தமிழில் ஜான்வி கபூர் உச்ச நடிகர்களுடன் அறிமுகமாவதை அவர் விரும்பியிருக்கலாம். அஜித், விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் முதல் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் நினைத்திருக்கலாம் என கூறியுள்ளார்.