ரொம்ப பிகு பண்ணாதீங்க…. ரஜினி, ஷாருக்கான் கூப்பிட்டும் ‘நோ’ சொன்ன பிரபல VJ!!!
Author: Udayachandran RadhaKrishnan23 May 2023, 1:51 pm
சினிமாவில் வெற்றி என்பது அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக அது பெரிய பட்ஜட், பெரிய நடிகர்கள் படமாக இருந்தால் சுலபமாக அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறிவிடலாம்.
அப்படித்தான் 90ஸ் காலத்தில் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தவர் பெப்ஸி உமா. சன்டிவியில் ஒளிபரப்பான உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி மூலமாக பாப்புலர் ஆன அவர், இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
இந்த நிகழ்ச்சியை 18 ஆண்டுகள் தொகுத்து வழங்கியவர் உமா. அவர் கடைசியில் சொல்லும் Keep Trying. Keep Trying Better Luck Next Tume என்ற வசனம் இன்னும் பலருக்கு ஞாபகம் இருக்கும்.
அவரின் முகத்தோற்றம், குரல் என அவரை பிடிக்க பல காரணங்களை 90ஸ் கிட்ஸ்கள் கூறுவார்கள். இப்படி கனவுக்கன்னியாக இருந்த உமா சினிமா உலகம் ஏன் விட்டு வைத்தது என யோசிப்பீர்கள்?
ஆனால் சினிமா உலகம் அவரை விட்டு வைக்கவில்லை. அவருக்கு சினிமா வாய்ப்புகள் கொட்டிக்கிடக்க, தனக்கு டிவி வாழ்க்கையே போதும் என சினிமாவை திரும்பி கூட பார்க்கவில்லையாம்.
அப்படித்தான் ஏஆர் ரஹ்மானின் ஸ்டூடியோவில் உமாவை பிரபல இந்தி பட தயாரிப்பாள சுபாஷ் காய் சந்தித்தார். ஷாருக்கானை வைத்து உருவாக உள்ள படத்தில் உமா நடிக்க வைக்க கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ஆனால் அவர் வந்த வாய்ப்பை மறுத்துள்ளார். ஆனால் இதை தாண்டி தமிழில் முத்து படத்தில் நாயகியாக நடிக்க அவருக்கு அழைப்பு வந்துள்ளது. மீனாவுக்கு முன் படக்குழு உமாவை தான் கேட்டுள்ளனர்.
ஆனால் சினிமாவில் நடிக்கும் ஆசை இல்லை என்று கூறி அனுப்பிவிட்டாராம். அப்படி ஒரு வேளை அவர் நடித்திருந்தால் 90ஸ் கிட்ஸ்களின் நயன்தாராவாகவே மாறியிருப்பார்.