தப்பு செஞ்சுட்டு மறைக்காதீங்க… கழுவி ஊற்றிய ஜிவி பிரகாஷ் : பெருகும் ஆதரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2023, 1:05 pm

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள பத்து தல படம் பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நரிக்குறவர் மக்கள் வந்துள்ளனர்.

தியேட்டருக்கு வெளியே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரோகிணி திரையரங்கு உரிமையாளர் பன்னீர்செல்வம், பத்து தல படம் யு\ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

இதையடுத்து திரையரங்கில் நரிக்குறவர் இன மக்கள் படம் பார்க்கும் வீடியோவை ரோகிணி திரையரங்கு நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சமூகத்தில் நடக்கும் ஒரு சில பிரச்சனைகளுக்கு வாய்ஸ் கொடுக்கும் ஜிவி பிரகாஷ், இந்த சம்பவம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இவரது கருத்துக்கு ஆதரவாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!