என்னை அவமானப்படுத்தனும்னு நினைக்காதீங்க… Troll’களுக்கு ஸ்ருதி ஹாசன் பதிலடி!
Author: Rajesh19 December 2023, 8:56 pm
கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.
ஸ்ருதி ஹசன் தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் – பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 22 -ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் ப்ரோமோஷன் ஒன்றில் பேசிய அவர்,

8 ஆண்டுகளாக தனக்கு வாழ்க்கையில் இருந்து மதுவை தவிர்த்து விட்டேன் என்றும், எட்டு ஆண்டுகளாக தனது வாழ்க்கையில் இருந்து மதுவை தவிர்த்து விட்டேன் என்றும், தன்னுடைய வாழ்க்கையில் மது ஒரு பெரிய பகுதியாக இருந்தது.
குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மது அருந்துவதால், எனக்கு ஒரு நன்மையும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். குடிப்பழக்கம் உடையவர்களுடன் நான் தொடர்பில் இருக்க மாட்டேன். அவர்களை தவிர்த்து விடுவேன் என்று தெரிவித்தார். இதனால் ஸ்ருதி ஹாசனை விமர்சித்து பலர் ட்ரோல் செய்தனர்.
அதை பார்த்து கடுப்பில் உச்சத்துக்கே சென்ற ஸ்ருதி ஹாசன், தனது எக்ஸ் தளத்தில், “எனது நிதானம் பற்றி பேசும் விமர்சனங்களால் என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலன் அளிக்காது. வாழ்க்கை நன்றாக இருக்கிறது. கடவுள் கனிவானவர் என்று ஸ்ருதி ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.