உனக்கு ஒழுங்கா அதக் கூட பண்ண தெரியாதா ? கண்டபடி திட்டிய இயக்குநர்.. கண்ணீர் விட்டு அழுத பிரபலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2023, 5:16 pm

சினிமாவில் பிரபலமாவது அவ்வளவு சுலபமல்ல. கடின உழைப்பு , திறமை இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்படித்தான் தனது குரல் வளத்தால் இந்தியா முழுவதும் பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் அந்த பிரபலம்.

அவர் தான் மெலடி குயின் ஸ்ரேயா கோஷல். இவர் பின்னணி பாடிய பாடல் அனைத்துமே சூப்பர் ஹிட். இன்றளவும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து போகிறது இவருக்கு. முன்பே வா என் அன்போ, நினைத்து நினைத்து பார்த்தால், ஐயையோ என பல பாடல்கள் இன்று ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.

கஷ்டமான பாடல்களை சுலபமாக தனது வசீகர குரலால் பாடியவர் ஸ்ரேயா கோஷல், அப்படிப்பட்ட ஸ்ரேயாவை பிரபல இயக்குநர் அமீர் கடிந்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

பருத்திவீரன் படத்தில் ஐயையோ பாடலை ஸ்ரேயா பாடியிருப்பார். அப்போது ஸ்ரேயா கோஷலிடம் கதாநாயகியாக பிரியா மணி நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் 8ஆம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். அதற்கேற்ற மாதிரி பாடு என கூறியுள்ளார்.

ஸ்ரேயா கோஷல் தொடர்ந்து பாடியுள்ளார். ஆனால் அமீருக்கு பிடிக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் வேற மாதிரி பாடுங்க என கூறியுள்ளார். இதனால் கடுப்பான ஸ்ரேயா அழுதுள்ளார். தன்னை தான் அவர் திட்டுகிறார் என நினைத்து அழுதுள்ளார்.

இதன்பின் அமீரே பாடும் அறைக்கு சென்று நான் உங்களை திட்டவில்லை, உங்களுக்கு தமிழ் தெரியமாட்டிங்குது, கிராமத்து பெண் பாடற மாதிரி வேணும் என கூறியுள்ளார்.

இதன்பின்னர்தான் அந்த பாடலை அவர் அப்படி பாடியுள்ளார். ஆனால் ஸ்டூடியோவுக்கு வெளியில் காத்திருந்த பாடகியின் தாய், இயக்குநரிடம் கடிந்து கொண்டுள்ளார். ஒரு பாடலை பாட எவ்வளவு நேரம் காத்திருக்க வைப்பீர்கள் என கடிந்து கொண்ட சம்பவத்தை இயக்குநர் அமீரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu