நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’ : வாரிசு இப்பதான் ரிலீஸ் ஆயிருக்கு அதுக்குள்ள குட் நியூஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2023, 6:02 pm

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் விஜய்யின் வாரிசு முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன், அஜித்தின் துணிவு படத்தின் வசூலை முறியடித்தது. வம்ஷி பைடிபள்ளி இயக்கிய, வாரிசு படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் ரூ.26.5 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு ரூ.26 கோடி வசூல் செய்துள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கியுள்ள ‘வாரிசு’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வாரிசு படம் தமிழகத்தில் ரூ.17 கோடியும், கர்நாடகாவில் ரூ.5 கோடியும், கேரளாவில் ரூ.3.5 கோடியும், மற்ற பகுதிகளில் ரூ.1 கோடியும் வசூலித்துள்ளது. வெளியான முதல் நாளில், படம் தோராயமாக 67% ஆக்கிரமிப்பைப் பெற்றது. வாரிசு படத்தில் காலை காட்சிகள் 55.6% ஆக்கிரமிப்பையும், பிற்பகல் காட்சிகள் 68.6% ஆக்கிரமிப்பையும் கண்டன. மாலையில் அது 72.4% ஆகவும், இரவு காட்சிகளில் 71.2% ஆக்கிரமிப்பையும் பெற்றன. வாரிசு படத்தின் இரண்டாவது நாள் டிக்கெட்டுகள் ஏற்கனவே 7 கோடிக்கு விற்பனையாகியுள்ளன.

இந்த நிலையில் வாரிசு படம் விஜய் ரசிகர்களை பூர்த்தி செய்துள்ள நிலையில், குடும்பத்தினர் வருகை அதிகரித்துள்ளது. படம் வெளியாகி இரண்டு நாள் கூட முழுமையடையாத நிலையில், இன்னும் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வாரிசு படத்தை அடுத்து விஜய் நடிக்கும், லோகேஷ் கனகராஜ் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது. நேற்று வாரிசு ப்ரிமீயம் காட்சியை பார்த்த லோகேஷ், வாரிசு படத்திற்காகத்தான் காத்திருந்தோம், இனி அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் தளபதியின் 67வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், இன்னும் 10 நாட்களில் அடுத்த அப்டேட் வெளியாக உள்ளது என கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 560

    2

    1