கிழவி வந்துட்டா.. ரசிகர்களால் அசிங்கப்படுத்தப்பட்ட 80 S கனவு கன்னி..!
Author: Vignesh9 May 2024, 6:04 pm
80ஸ் எவர்கீரீன் நடிகைகள் என்றவுடன் அதில் கண்டிப்பாக அம்பிகா பெயர் இருக்கும். ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழிலில் மட்டுமில்லை தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பெரியதிரையில் கொடிகட்டி பறந்த அம்பிகா கடைசியாக அவன் இவன் படத்தில் நடித்து மிரட்டியிருப்பார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே, ஒரு சில காலகட்டத்தில் அம்பிகா வாய்ப்பில்லாமல் இரண்டாவது நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் 1988 ல் பிரேம் குமார் மோகனை திருமணம் செய்து 8 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன்பின்னர், 6 ஆண்டுகளுக்கு பின்னர் 2000 ஆம் ஆண்டு ரவிகாந்த் என்பவரை திருமணம் செய்து இரண்டு ஆண்டுகளில் அவரையும் விவாகரத்து பெற்ற பிரிந்தார். தற்போது தன் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வரும் அம்பிகா சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் படிக்க: வீங்கிய முகத்துடன் இருக்கும் காஜல் அகர்வால்.. ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி மாறிட்டாங்களே..!
இந்நிலையில், அம்பிகா குறித்தது சினிமா விமர்சகரும் டாக்டருமான காந்தராஜ் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது, அம்பிகா ஆரம்பத்தில் நடித்து வந்த போது காதல் பரிசு படத்தில் கிழவி போன்று காணப்பட்டதாகவும், வடிவேலு அம்பிகாவுக்கு வாய்ப்பு தேடி கொடுக்கும் அளவிற்கு அவருடைய நிலை இருந்ததாகவும், அந்த அளவிற்கு என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது.
மேலும் படிக்க: நான் அங்கிளின் அசிஸ்டண்ட் இல்லை.. புது மாப்பிள்ளையுடன் ஷங்கர் அளித்த பிரஸ்மீட்..!
ஆனால், அம்பிகா சீக்கிரம் திருமணம் செய்ததால் எல்லாம் வாய்ப்பு பறிபோகவில்லை. வாய்ப்பு போக அவர் வயதான தோற்றத்தை காண்பித்து முக சுருக்கம் தான் என்றும், முகச்சுருக்கம் அதிகமானதால் அம்பிகாவிடம் சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய சொன்னார்கள். ஆனால், அம்பிகா அதை செய்யவில்லை. உச்சத்தில் இருக்கும் போது காதல் பரிசு படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த போது, கிழவி வந்துட்டா…… என்று ரசிகர்கள் கத்துவதை தான் அந்த சமயத்தில் கேட்டதாக காமராஜ் தெரிவித்து இருந்தார்.