டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!
Author: Selvan23 February 2025, 5:15 pm
வசூலில் மந்தமாகும் NEEK
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில் பெப்ரவரி 21ஆம் தேதி கிட்டத்தட்ட 10 படங்கள் திரைக்கு வந்துள்ளன.
அதில் மக்கள் மிகவும் எதிர்பார்த்த திரைப்படம் என்றால் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும்,பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படமும் தான்,இரண்டு திரைப்படங்களும் பக்கா கமர்சியல் படம் என்பதால் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது,அதிலும் குறிப்பாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் இப்போ உள்ள இளைஞர் பட்டாளங்களை சுண்டி இழுத்துள்ளதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்க: சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!
மேலும் இப்படம் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது,இதனால் வரக்கூடிய நாட்களில் இவருடைய மார்க்கட் மின்னல் வேகத்தில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படம் தற்போது வரை 16.75 கோடி வசூலையும் தனுஷின் NEEK படம் 4.5 கோடி வசூலையும் அடைந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிவிக்கிறது