விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2025, 7:59 pm

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டான் படத்தின் தழுவலாக உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், விமர்சனத்தை முறியடித்து படம் ஒவ்வொரு நாளும் வசூலை குவித்து வருகிறது.

இதையும் படியுங்க : திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏற்கனவே பிரதீப் ரங்நாதனை வைத்து ₹5 கோடி பட்ஜெட்டில் தயாரித்த லவ்டுடே படம், 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதே போல தற்போது டிராகன் படம் 37 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு தற்போது வரை 55 கோடியை தாண்டியுள்ளது.

குறிப்பாக திங்கட்கிழமை (நேற்று) மட்டும் ஒருநாளில் ₹3.81 கோடி வசூல் செய்துள்ளது. விடாமுயற்சி படம் வெறும் ₹2.75 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளது.

Dragon Beat Vidaamuyarchi Movie Collection

வார நாட்களிலும் சரி,வார இறுதி நாட்களிலும் படத்திற்கு வசூல் மழை குவிவதால் சுலபமாக ரூ.100 கோடியை வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…