வெற்றிகரமாக 25 வது நாள்
பிரதீப் ரங்கநாதன்,அனுபமா பரமேஸ்வரன்,கயாடு லோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘டிராகன்’ திரைப்படம்,அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இதையும் படியுங்க: ‘கூலி’ படத்தில் இருந்து வெளியேறிய ரஜினி..வைரலாகும் வீடியோ.!
ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படம்,காதல்,காமெடி,மற்றும் ரொமான்ஸ் கலந்து உருவாக்கப்பட்டு,இளைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியான ‘டிராகன்’ தொடக்கத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது,படத்திற்கேற்ப பிரதீப் ரங்கநாதனின் அசத்தலான நடிப்பு,அனுபமா மற்றும் கயாடு லோகரின் சிறப்பான கதாபாத்திரங்கள்,லியோன் ஜேம்ஸ் வழங்கிய இசை,அனைத்தும் டிராகன் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தன.
படத்தில் கெளதம் வாசுதேவ மேனன்,மிஷ்கின்,ஜார்ஜ் மரியான்,ஹர்ஷத் கான்,விஜே சித்து ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளனர்.படம் ரிலீஸ் ஆகி 25 நாட்களாகியும், திரையரங்குகளில் ‘ஹவுஸ் புல்’ காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெறும் 37 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம்,உலகளவில் 145 கோடி வசூலித்துள்ளது.அடுத்த 10 நாட்களில் படத்திற்கு எந்த முக்கியமான போட்டியும் இல்லாததால் ‘டிராகன்’ திரைப்படம் 150 கோடி வசூல் சாதனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்த ஆண்டின் முதல் 150 கோடி வசூல் திரைப்படமாக ‘டிராகன்’ உருவாகும்.
