AGS நிறுவனத்துக்கு ஜாக்பாட்.. அள்ளிக் கொடுத்த DRAGON : அசர வைத்த முதல் நாள் வசூல்!
Author: Udayachandran RadhaKrishnan22 February 2025, 11:00 am
ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு 2024 – 2025 வருடம் ஜாக்பாட் வருடம் என்றே சொல்லலாம், காரணம் வெளியான படங்கள் எல்லாமே நல்ல லாபத்தை ஈட்டி தந்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியான லவ் டுடே படம் ஹிட் கொடுத்தது. இயக்குநராக இருந்த பிரதீப் ரங்கநாதன் அறிமுக ஹீரோவானார்.
ஒல்லியான உடல் அமைப்பை கொண்ட அவர், தனுஷ் போல உள்ளதாக ரசிகர்கள் கூறினர். லவ் டுடே படத்தின் திரைக்கதை அனைவரையும் கவர்ந்ததால் அந்த படம் ஹிட் அடித்தது.
பின்னர் 2024ல் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியான விஜய்யின் கோட் படம் கடந்த வருடத்தின் சிறந்த வசூல் திரைப்படமாக அமைந்தது.
அதே போல 2025ல் லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு படுதோல்வி அடைந்தாலும், விட்ட காசை நேற்று வெளியான DRAGON படம் மூலம் ஈடுகட்டிவிட்டார்.
நேற்று வெளியான DRAGON படத்தில் பிரதீப், அனுபமா, இவானா உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருந்தது. கல்வி குறித்து படம் எடுக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். நேற்று ஒரே நாளில் படம் உலக அளவில் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ₹6 கோடி வசூலித்துள்ளது.
இது ஒரு சாதாரண படம் கொடுத்துள்ள பெரிய ஓபனிங்காக பார்க்கப்படுகிறது. இனி சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.