மீண்டும் வைரலாகும் STR-வாய்ஸ்…டிராகன் படக்குழு கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்….!

Author: Selvan
27 January 2025, 9:48 pm

மீண்டும் வைரலாகும் சிம்புவின் பிரேக்கப் பாடல்

நடிகர் இயக்குனர் பாடகர் டான்சர் என பல வித வித்தைகளுக்கு சொந்தக்காரர் சிலம்பரசன் என்ற சிம்பு.இவர் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக தரமான கம் பேக் கொடுத்து வருகிறார்.அந்த வகையில் கமல்ஹாசனுடன் தக் லைப் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க: போலீசாரால் என் வாழ்க்கையை போச்சு…நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் நடந்த குளறுபடி…இளைஞன் பரபரப்பு பேட்டி..!

இந்த நிலையில் அஸ்வந்த் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் ட்ராகன் திரைப்படத்தில் ஒரு பாடலை பாட இருப்பதாக படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.மேலும் இப்படம் காதலர் தினத்தன்று வெளியாக இருப்பதால் இப்படத்தில் ஒரு லவ் பிரேக்கப் பாடலான”ஏண்டி என்னை விட்டு போன”என்ற பாடலை சிம்பு பாடி இருக்கிறார்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் சிம்பு நிறைய காதல் தோல்வி பாடல்களை பாடி ஹிட் கொடுத்ததால் இந்தப்பாடலும் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாளை ஜனவரி 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு,இப்பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் வரும் பெப்ரவரி 3 ஆம் தேதி சிம்பு தனது பிறந்தநாளையொட்டி தன்னுடைய அடுத்தடுத்து 3 படங்களின் குறித்த மாஸ் அப்டேட்டை வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சிம்பு ரசிகர்கள் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!