இருந்த இடமே தெரியாமல் போன NEEK
தமிழ் சினிமாவில் கடந்த மாதம் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி டிராகன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்க: பிட் வேணுமா..இது என்ன அழகி போட்டியா..காங்கிரஸ் தலைவரை வெளுத்துவிட்ட கவாஸ்கர்.!
தனுஷ் இயக்கி தயாரித்த ‘நீக்’ திரைப்படத்தில் பல இளைஞர் பட்டாளங்கள் நடித்திருப்பார்கள்,காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தனுஷின் முந்தய இயக்கத்தில் வெளிவந்த பா.பாண்டி மற்றும் ராயன் திரைப்படம் போல் பெரிதாக வெற்றிபெறவில்லை,படத்தில் நிறைய குறைகள் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் ஜொலிக்காமல் ஆரம்ப முதலே ஆமை வேகத்தில் வசூல் செய்து வந்தது.
படம் வெளியாகி இதுவரை 8 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது,அதேசமயம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த ‘டிராகன்’ படம் எதிர்பார்த்தை விட ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டது,படம் ஆரம்பம் முதலே மின்னல் வேகத்தில் வசூலை குவித்து 100 கோடி பாக்ஸ் ஆபிசில் இணைந்தது,அதுமட்டுமில்லாமல் பல திரைப்பிரபலங்கள் படத்தை பார்த்து நேர்மறையான விமர்சனங்களை கொடுத்து வந்ததால் தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதியது,இப்படம் இதுவரை 114 கோடி வசூலை அடைந்துள்ளதால்,இதுக்கு மேல் படத்தின் வசூல் எகிற வாய்ப்பில்லை என சினிமாவட்டரங்கள் தெரிவிக்கின்றன.