பிரபல தாதா நடத்திய போதை விருந்து.. கேரள நடிகருடன் சென்ற தமிழ் நடிகை கைது!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2024, 5:49 pm

போதை பார்ட்டியில் கேரள நடிகர், தமிழ் சினிமா நடிகை கலந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தியுளளது.

கேரள கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போதை பார்ட்டி மற்றும் குத்தாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விருந்து தாதா ஓம்பிரகாஷ் தலைமையில் நடந்துள்ளது. இந்த பார்ட்டிக்கு தமிழ் சினிமா பட நடிகை சென்றுள்ளார்.

அந்த நடிகை மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தில் நடித்த நடிகை ப்ராயாகா மார்ட்டின் ஆவார். இவர் அந்த போதை பார்ட்டியில் கலந்து மது மற்றும் போதை உட்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த போலீசார் ஓட்டலில சோதனை நடத்திய போது, போதைப் பொருள் மற்றும் குத்தாட்ட விருந்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதை தவிர கேரள நடிகரும் அந்த பார்ட்டிக்கு சென்றுள்ளார். தமிழ் நடிகையான ப்ராயகா மார்டினுடன் இணைந்து போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்க: காலத்துக்கும் நின்னு பேசும்.. சாய் பல்லவி ரசிகர்களுக்கு SLIPPER SHOT கொடுத்த நித்யாமேனன்!

இதையடுத்து தாதா ஓம்பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அதே போல போதை பார்ட்டி குறித்த தகவல் பற்றி கேரள நடிகர் மற்றும் நடிகையுடன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓம் பிரகாஷ் கேரளாவில் பெரிய தாதாவாக உள்ளார். அவர் நடத்திய விருந்தில் தமிழ் நடிகைக்கு என்ன வேலை என்பது குறிதது விரைவில் தகவல் வெளியே வரும் என பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 280

    0

    0