சவால் விட்ட ஜி.வி.பிரகாஷ் …மகிழ்ச்சியில் குட் பேட் அக்லி படக்குழு ..!

Author: Selvan
26 November 2024, 1:40 pm

தேவி ஸ்ரீ பிரசாத்தை நீக்கிய காரணம்

அஜித்தின் 63 வது படமாக உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றி வந்த தேவி ஸ்ரீ பிரசாத்தை திடீரென படக்குழு நீக்கியது.

Good Bad Ugly movie music controversy

கங்குவா பட தோல்வியினால் நீக்கியிருப்பார்கள் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டது.ஆனால் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல் கொடுப்பதில் தாமதிக்கிறார் என்றும்,படத்தின் நான்கு பாடல்கள் இருக்கும் நிலையில் இதுவரை எந்த பாடலையும் கொடுக்கவில்லை என்பதால் அவரை நீக்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க: நீயெல்லாம் Second Hand : சமந்தா மீது நெட்டிசன்கள் மோசமான விமர்சனம்..!!

இதனால் அவருக்கு பதிலாக ஜி வி பிரகாஷ் குமாரை படக்குழு அணுகியது.தற்போது இவரது இசையில் வெளிவந்த அனைத்து படங்களும் மாஸ் ஹிட் ஆனது,குறிப்பாக அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

Ajith Good Bad Ugly music team update

படக்குழு ஜி வி யிடம் பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் கொஞ்சம் விரைவில் பாடல்களை தயார் செய்து தருமாறு கேட்டுள்ளனர்.அதற்கு ஜி வி பிரகாஷ் குமார் இன்னும் ஒரே வாரத்தில் 4 பாடல்களையும் தருகிறேன் என்று சொன்னதால் குட் பேட் அக்லி படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?