அவர்கிட்ட வந்தாலே படபடன்னு ஆகுது.. பிரபல நடிகர் குறித்து மனம் திறந்த ரவீனா ரவி..!

Author: Vignesh
24 August 2023, 2:30 pm

மாமன்னன் படத்தில் நடித்த ரவீனா ரவி முன்னதாக டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருந்து வருகிறார். இவர் சாட்டை, கத்தி, ஐ, வேலையில்லா பட்டதாரி, தெறி, போன்ற பல படங்களில் ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

raveena ravi-updatenews360

ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே என்ற படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

raveena ravi-updatenews360

அண்மையில், வெளியான மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் மனைவியாக ரவீனா ரவி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் YouTube சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பல நடிகர்களுடன் இவர் எடுத்த புகைப்படங்களை காண்பித்து அது குறித்த சில வார்த்தைகளை பேச சொன்னார்கள்.

raveena ravi-updatenews360

அப்போது, தனுஷ் உடன் எடுத்த ஒரு புகைப்படத்தை பற்றி பேசிய ரவீனா ரவி, தனுஷ் எனது க்ரஷ் லிஸ்டில் உள்ளார். ஐ லவ் யூ தனுஷ் சார்.. இந்த புகைப்படம் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில் டப்பிங் போது எடுத்தது. அவருடன் வேலை செய்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்றும், வேலையில்லாத பட்டதாரி மற்றும் பவர் பாண்டி படத்தின் போது டப்பிங் பேசுவதில் தனுஷ் உடன் ஸ்டுடியோவில், இருந்த சமயத்தில் மிகவும் பதட்டமாக இருந்தது. டப்பிங் செய்வதாக இல்லை அவரை பார்ப்பதா என்பதே தெரியவில்லை. மனதில் பல விஷயங்கள் ஓடிக்கொண்டே இருந்தது. அவர் பக்கத்தில் இருக்கும் பொழுது டப்பிங்கில் கவனம் செலுத்துவது கஷ்டமாக இருந்தது என்று ரவீனா ரவி பேசியுள்ளார்.

raveena ravi-updatenews360
  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 500

    0

    0