தமிழ் நடிகைகளே வேண்டாம்… மலையாள மான் குட்டிகளை இறக்கி மமதையில் திரியும் இயக்குனர்கள்!

Author: Shree
25 July 2023, 2:05 pm

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பெரும்பாலானோர் ஹீரோயின்களை மலையாள சினிமாவில் இருந்தும் கேரளாவின் அழகிய இளம் பெண்ககளை அறிமுகம் நாயகிகளாக இறக்கியும் வருகிறார்கள். பல வருடங்களாக இந்த விஷயம் தொடர்ந்து நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இதனால் பல திறமையுள்ள தமிழ் நடிகைகள் அடையாளம் தெரியாமல் போய்விடுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

நம் தமிழ் திரைப்படங்களுக்கே தமிழ் நடிகைகளை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் இங்குள்ளவர்களின் நிலைமை என்ன ஆவது என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது கோலிவுட்டில் பெரும்பாலும் கேரள நடிகைகள் தான் இருக்கிறார்கள். அறிமுக நடிகைகளை கூட அங்கிருந்து தான் அழைத்து வருகிறார்கள்.

அப்படி அழைத்து வந்து தற்போது மார்க்கெட் பிடித்திருப்பவர் நயன்தாரா, சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி, அபர்ணா பாலமுரளி, நித்யா மேனன், மஞ்சு வாரியர், லிஜோமோல் ஜோஸ், சம்யுக்தா மேனன், அபர்ணா தாஸ்,ரெஜிஷா விஜயன், அன்னா பென், நிமிஷா சஜயன் உள்ளிட்ட நடிகைகள் மேலும் இன்னும் பல நடிகைகள் வரலாம். இதன் மூலம் தமிழ் நடிகைகள் பலர் அடையாளம் கூட காண முடியாமல் போய்விடுவார்கள். எனவே இந்த நிலை மாறவேண்டும் என கோலிவுட்டில் பரவலாக அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 380

    0

    0