தூங்கி ரொம்ப நாள் ஆச்சு.. வருத்தத்தில் கண்கலங்கி வீடியோ வெளியிட்டு நீக்கிய துல்கர் சல்மான்..!
Author: Vignesh4 July 2023, 11:30 am
தமிழ் சினிமாவை போல மலையாள சினிமாவில் கூட வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மானும் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார்.
நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் 2012 ஆம் ஆண்டு ‘செகண்ட் ஷோ’ என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.
அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து. பின் இவர் வாயை மூடி பேசவும் என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து மூலம் இந்த மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
முதல் படத்திலேயே நடிகர் துல்கர் சல்மான் பெரிய அளவு பிரபலமானார். அதை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரான மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி என்ற திரைப் படத்தில் நடித்தார். அந்த படமும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதே போல இவரது நடிப்பில் தமிழில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஹே சினாமிகா’ போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இப்படி பல தமிழில் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளார்.
இதனிடையே, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கோதா என்ற படத்தில் கேங்ஸ்டர் திரில்லர் ஆக வெளியான டிஸர் கடந்த வாரம் வெளியானது. தற்போது ஐந்து நாட்களில் 11 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.
இந்நிலையில், துல்கர் சல்மான் இன்ஸ்டாவில் கண்கலங்கி ஒரு வீடியோவை பதிவிட்டு சற்று நேரத்தில் அதை நீக்கி உள்ளார். அது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நான் தூங்கி ரொம்ப நாள் ஆச்சு நான் முதன்முறையாக சந்தித்த விஷயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், அது தன் மனதில் நீங்கவில்லை என்றும், நான் அனைத்தையும் சொல்ல நினைக்கிறேன் ஆனால் எனக்கு அனுமதி இல்லை என துல்கர் சல்மான் அந்த வீடியோவில் கண்கலங்கி பேசியிருந்தார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என வருத்தத்துடன் சமூக வலைதளங்களில் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
What happened to #DulquerSalmaan 🥺🥺. He posted and deleted it later. Is everything alright to him ?. #KingOfKotha pic.twitter.com/PyGnrwnorw
— DON BOY (@preethamtweets_) July 2, 2023