மாதவிடாய் நேரத்தில் இத செஞ்சேன் : நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2022, 1:39 pm

நடிகை சாய் பல்லவி மாதவிடாய் நேரத்தில் தான் நான் அந்த விஷயத்தை செய்தேன் என்று பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு நடிகை மீரா ஜாஸ்மின் நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான கஸ்தூரிமான் என்ற திரைப் படத்தில் கல்லூரி மாணவியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சாய் பல்லவி.

அதனைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் என்ற திரைப்படம் தான்.

இந்த படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவி க்கு தென்னிந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். இதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தமிழில் தியா என்ற படத்தில் நடித்த சாய் பல்லவி க்கு இந்த படம் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை. அதன் பிறகு நடிகர் தனுஷின் மாரி 2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் சாய்பல்லவி இந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் இந்தியா முழுதும் ஹிட்டடித்தது.

இந்தப் பாடலில் நடனம் ஆடும் பொழுது எனக்கு மாதவிடாய் நேரம் என்று கூறியுள்ளார் சாய் பல்லவி. சிறு வயதிலிருந்தே எனக்கு நடனம் மீது ஆர்வம் அதிகமாக வகுப்புகளுக்கு செல்வது போட்டிகளில் பங்கேற்பது போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வந்தேன்.

அப்போது எடுத்த அந்த முயற்சிகள் தான் இப்போது என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கின்றது என்றால் அதுதான் உண்மை. மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடல் படப்பிடிப்பு நடக்கும் பொழுது எனக்கு மாதவிடாய் நாட்கள் தான்.

அந்தப் பிரச்சினையும் தாண்டி அந்த பாடலுக்கு நான் நடனமாடி இருந்தேன். இப்போது இந்த பாடலில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று கொண்டிருக்கிறது.

இப்படியான முக்கியமான விஷயங்கள் இருக்கும்பொழுது இந்த மாதிரி மாதவிடாய் நாட்களை எல்லாம் மனம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாது என்று கூறியுள்ளார். சாய்பல்லவியின் சினிமா மீது இருக்கும் இந்த அர்ப்பணிப்பு குறித்து அறிந்த ரசிகர்கள் அவருடைய செயலைக் கண்டு வியந்து வருகின்றனர்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 981

    10

    2