நடிப்புக்கு குட் பை… ஷாக் கொடுத்த தனுஷ் பட நடிகை துஷாரா..!

Author: Vignesh
10 July 2024, 3:35 pm

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் பீரியட் பிலிம் ஆன சர்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைமில் கடந்த வருடம் வெளியாகி சக்கை போடு போட்டது. மெட்ராஸ், அட்டக்கத்தி, கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா ரஞ்சித்தின் அடுத்த படமான சர்பேட்டா பரம்பரை படம் சுதந்திரத்திற்கு பின் காலகட்டத்தில் நடக்கும் பாக்ஸிங் கதையாகும். இதில் ஆர்யா சஞ்சனா நடராஜன், துஷாரா விஜயன், பசுபதி உட்பட பலர் நடித்திருந்தார்கள். தற்போது பா. ரஞ்சித் துஷாரா விஜயனை கதாநாயகியாக போட்டு நட்சத்திரம் நகர்கிறது என்னும் படத்தை இயக்கி முடித்து, சமீபத்தில் வெளியானது.

இப்படத்துக்கு, பின்னால் அன்புள்ள கில்லி, கழுவேர்த்தி மூக்கன், அநீதி போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்திலும், நடிகர் தனுஷின் ராயன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அளித்த பேட்டியின் போது, எனக்கு 26 வயது ஆகிறது என்பதால், என்னுடைய 35 வயது வரை நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி விடுவேன். இந்த உலகம் முழுவதும் பயணிக்க விரும்புகிறேன். அதற்காக நான் 35 வயதுக்கு மேல் நடிக்க மாட்டேன் என்று அப்படி இல்லை. இந்த உலகத்தில் நான் பயணிக்காத நாடே இல்லை என்பதை உறுதி செய்யும் அளவிற்கு எல்லா நாடுகளுக்கும் பயணிப்பதில் கவனம் செலுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!