தனுஷ் அளவில்லா பாசம் வைத்துள்ளார்…. போட்டுடைத்த துஷாரா விஜயன்!

Author:
24 October 2024, 8:30 pm

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தற்போதைய பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் துஷாரா விஜயன். தமிழில் போதை ஏறி புத்தி மாறி திரைப்படத்தில் நடித்து 2019 ஆம் ஆண்டு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு ஆர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். அந்த திரைப்படத்தில் மெட்ராஸ் பாஷை பேசி துஷாரா விஜயன் அசத்தியிருப்பார் .

Dushara Vijayan (4)

மேலும், ஆர்யாவுடன் இருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் உள்ளிட்டவற்றில் துஷாரா விஜயன் பின்னி பெடல் எடுத்திருப்பார். இதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகியதோடு பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து குவியது வாங்கியது .

மேலும், இவர் அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி ரிலீஸ் ஆக தயாராகிக் கொண்டிருக்கும் வேட்டையன் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார்.

dhanush

முன்னதாக அவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ராயன் திரைப்படத்தில் தனுஷின் தங்கையாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் துஷாரா விஜயன் “நடிகர் தனுஷ் குறித்து சமூக வலைதளத்திலும், சினிமா வட்டாரத்திலும் பேசப்படும் கிசுகிசுக்கள் அனைத்தும் பொய்யானது. அவர் மிகவும் டிசிப்ளினான நடிகர் அவர் நடிப்பின் மீது அளவில்லா பாசம் வைத்துள்ளார்” என்று தனுஷ் குறித்து பாசிட்டிவாக பேசியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் தங்கச்சி ஆச்சே அப்படித்தானே இருப்பார் என கூறி வருகிறார்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 142

    0

    0