தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தற்போதைய பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் துஷாரா விஜயன். தமிழில் போதை ஏறி புத்தி மாறி திரைப்படத்தில் நடித்து 2019 ஆம் ஆண்டு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பிறகு ஆர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். அந்த திரைப்படத்தில் மெட்ராஸ் பாஷை பேசி துஷாரா விஜயன் அசத்தியிருப்பார் .
மேலும், ஆர்யாவுடன் இருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் உள்ளிட்டவற்றில் துஷாரா விஜயன் பின்னி பெடல் எடுத்திருப்பார். இதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகியதோடு பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து குவியது வாங்கியது .
மேலும், இவர் அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார்.
வேட்டையன் திரைப்படத்தில் முக்கியமாக சொல்லப்போனால் துஷாரா விஜய் மையப்படுத்தி தான் மொத்த கதையுமே நகரும். அதனால் இந்த திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். ஆனால், தனுசுடன் நடித்த ராயன் திரைப்படத்தில் அவருக்கு நேர்ந்த அதே கொடுமை தான் அதைவிட மோசமான கொடுமை வேட்டையன் திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.
இதனால் தமிழ் சினிமாவில் பலாத்கார காட்சிகளுக்காகவே படைக்கப்பட்ட நடிகையா துஷாராவின்? என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஒருவர் வில்லனாக நடித்து பிரபலமாகிவிட்டால் அவரை வில்லனாகவே காட்டுவார்கள். ஒருவர் காமெடியாக நடித்து பிரபலம் ஆகிவிட்டால் அவரை காமெடியனாகவே காட்டுவார்கள்.
அதே போல் நடிகை துஷாரா விஜயன் பலாத்கார காட்சிகளுக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறார் என கூறப்படுகிறது. இதனால் இனிமேல் துஷாரா விஜயன் நல்ல கதைகளை வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என பலரும் அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.
அப்படித்தான் பெண் ஒருவர் துஷாரா விஜயனை பயங்கரமாக வெளுத்து வாங்கி இருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது… துஷாரா நீங்க ஒரு நல்ல நடிகை. ஆனால் நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லி ஆகணும்…. முதல்ல நீங்க ராயன் படத்துலயும் ரேப் சீன்ல நடிச்சு முடிச்சிட்டீங்க.
இப்போ வேட்டையன் படத்திலும் அதே மாதிரியான ரேப் சீன்ல தான் நடிச்சிருக்கீங்க. ஓகே உங்களுக்கு ரஜினி படம் பெரிய படம் அதோட வாய்ப்பு மிஸ் பண்ண கூடாது. ஆனா இந்த படத்தில் எப்படி காமிக்கிறாங்க அப்படின்னு பாத்தீங்கன்னா…. இன்டர்வல் வரைக்கும் எல்லாம் ரேப் பண்ணி முடிச்சாச்சு. பிறகு இன்வெஸ்டிகேஷன் போது ஒவ்வொரு போலீஸ்காரரும் வராங்க அதை பத்தி பேசுறாங்க விசாரிக்கிறாங்க உடனே அந்த வீடியோ எடுத்து காட்றாங்க.
இதையும் படியுங்கள்: ராத்திரி குடிக்க போனேன்….அதுல கைவிட்டு – பட்டுனு போட்டு உடைத்த கருணாஸ்!
ஒரு முறையும் அந்த ரேப் சீனை காட்சிப்படுத்துவது பார்க்கும் எங்களுக்கு மிகவும் அருவருப்பாக இருக்கிறது. துஷாராவை நினைத்து பார்த்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் அப்படி நடிச்சா தான் உங்களுக்கு பணம் கொடுப்பாங்க. அதனால இப்படியா காட்டணும். திருப்பி திருப்பி அந்த காட்சிகளை பார்க்கும்போது அநீசியாக இருக்கு என அந்த பெண் தன்னுடைய தரப்பு கருத்தினை முன் வைத்திருக்கிறார்.
இவரின் இந்த கருத்தை பலரும் ஆதரித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட வேட்டையன் திரைப்படத்தில் நாங்களும் அப்படித்தான் உணர்ந்தோம் என பலரும் கூறி வருகிறார்கள். இதனால் இனி மேல் துஷாரா விஜயன் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ரசிகர்களே அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.