லியோ கழுகு சீன்.. ரஜினிக்கு பதிலடியா ? பங்கமாய் கலாய்த்த விஜய்யை கொண்டாடும் ரசிகர்கள்..!
Author: Vignesh27 October 2023, 2:28 pm
உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.
சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எல்லா விமர்சனத்திலும் லியோ படத்திற்கான ரேட்டிங் கொஞ்சம் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வசூல் வேட்டையில் படத்திற்கு எந்த குறைச்சலும் இல்லை.
உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியான லியோ, முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் அதிகபட்ச தொடக்க நாளில் வசூல் செய்த இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
சுமார் 461 கோடி வசூலை 7 நாட்களில் பெற்றதாக கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில், லியோ படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கிறது. அதாவது, இப்படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் நடிகர் விஜய் சண்டை காட்சிக்கு பின் தான் யார் என்பதை குறிப்பிட்டு இருக்கையில் அமர்ந்திருப்பார்.
அப்போது அவரை நெருங்கி வரும் கழுகு ஒன்று பார்க்கிறது. இதைக்கண்ட லியோ சிகரெட்டை பற்ற வைத்து எப்படிடா இருக்க என அந்த கடுகை பார்த்து கேட்கிறார். கதைப்படி ஃப்ளாஷ்பேக் விஜய் அந்த கழுகுடன் இருந்திருந்தாலும், இந்த ஒரு காட்சியில் மட்டுமே கழுகை நேருக்கு நேர் சந்திக்கும்படி காட்சி கோணங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.
அதற்கு முன்பான காட்சியில் இவ்வளவு பக்கத்துல ஒரு கழுதை பார்த்ததில்லை சார் பயமாய் இருக்கு என நக்கலாக விஜய் கூறியிருப்பார். இதனை கண்ட ரசிகர்கள் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன கதை கழுகு கதைக்கு விஜய் பதிலடி கொடுத்திருக்கிறார் என தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
#EppudraIrukka pic.twitter.com/CuAZEEbqpg
— Thalapathy (@vijay_fansotfc) October 26, 2023
முக்கியமாக இருவரில் யார் சூப்பர் ஸ்டார் என்கிற போட்டியும் தற்போது, நிலை வரும் நிலையில் இந்த சர்ச்சையும் எழுந்துள்ளது. அதாவது, ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுகையில், காக்கா எவ்வளவு முயன்றாலும் கழுகை நெருங்க முடியாது. காகம் அதை துரத்தி மேலே சென்று கொண்டே இருக்கும். ஆனால், கடுகு அமைதியாக இன்னும் மேலே செல்லும்.
மீண்டும் காகம் கழுகை நெருங்கி செல்லும், ஒரு கட்டத்தில் கழுகிற்கு காகத்திற்கு வேர்த்து விறுவிறுக்கும் அளவிற்கு கழுகு மேலே சென்று விடும். அதற்கு மேல் பறக்க முடியாமல் காகம் கீழே வந்து விழும். நாமும் வேலையை பார்த்துவிட்டு சென்று கொண்டே இருப்போம் எனக் கூறியிருந்தார். அதே நேரம் ரஜினியின் பேச்சுக்கு முன்பே லியோ லோகேஷ் கனகராஜ் படங்களில் கழுகை ஒரு குறியீட்டாக பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.