குட்-பை சொன்ன பிரபல தயாரிப்பு நிறுவனம்… பரிதாப நிலையில் விஜய் சேதுபதி; அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Author: Vignesh
12 November 2022, 12:45 pm

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். திரையிலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளீர், காந்தி டாக்கீஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இதனிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் ‘மைக்கேல்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

vijaysethupathi-updatenews360

ஹீரோவாக மட்டுமல்லாமல் தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களையும் தேர்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்திற்கு ’டிஎஸ்பி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Sunpictures-updatenews360

ஆரம்பத்தில் இந்தப்படம் துவங்கப்பட்ட போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் சன் பிக்சர்ஸ் என குறிப்பிடப்படாமல், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சன் பிக்சர்ஸ் ‘டிஎஸ்பி’ படத்திலிருந்து விலகியுள்ளது உறுதியாகியுள்ளது.

beast-updatenews360-1

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் கடைசியாக தயாரித்த பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் படங்கள் சுமாரான வெற்றியை பெற்றதாலும், விஜய் சேதுபதியின் மார்க்கெட் தற்போது டவுனாக இருப்பதாலும் ‘டிஎஸ்பி’ படத்திலிருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் விலகியுள்ளதாக இணையத்தில் தீயாய் செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியின் ’டிஎஸ்பி’ படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 613

    0

    0