ஆம்பள மூஞ்சின்னு கிண்டல் பண்றாங்க.. வெளிய தலை காட்ட முடியல.. சீரியல் நடிகை வேதனை..!
Author: Vignesh16 October 2023, 3:03 pm
வெள்ளித் திரையில் கலக்கும் பல டாப் நடிகர் நடிகைகளின் திரை வாழ்க்கை சின்னத்திலிருந்து தான் தொடங்கினார். சின்னத்திரையில், கிடைத்த வரவேற்ப்பை தொடர்ந்து, வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது சின்னத்திரையில் கலக்கும் டாப் நடிகர்கள் பலர் வெள்ளித்திரைக்கு எப்படி நுழைவது ஒரு சான்ஸ் கிடைக்காதா என்று ஏங்கும் நிலையில் இருந்து வருகிறார்கள். ஆனால், ஈரமான ரோஜாவே சிரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சுவாதி கொண்டே வெள்ளிதிரையை விட்டுவிட்டு தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
ஈரமான ரோஜாவே 2 சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சுவாதி கொண்டே. இவர் கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். கன்னட திரைப்படங்களின் மூலமாக சினிமா துறையில் அறிமுகமானவர். கன்னடத்தில் சுமார் நான்கு படங்களில் இவர் நடித்துள்ளார். திரைப்படங்களின் சுவாதிக்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் கன்னடத்தில் ஒரு சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார்.
கன்னடத்தில் சின்னத்திரையில் கலக்கிய பின்னர் தமிழ் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியல் 2 ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஸ்வாதி கொண்டே சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நடிக்க வந்த போது பல அவமானங்களை கடந்து வந்ததாகவும், அதிலும் சிலர் என்னை ஆம்பள மூஞ்சி என்று கிண்டல் செய்தனர், அதையெல்லாம் நினைக்கும் போது தினமும் அழுதேன் என்று கூறியுள்ளார்.