காலையிலிருந்து நைட்டு வரை.. அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இப்படி தான் நடந்துருக்கு.. சீரியல் நடிகை ஷாக் பேட்டி..!
Author: Vignesh11 August 2023, 6:00 pm
ஈரமான ரோஜாவே சீரியல் மாமியாராக நடித்து வருபவர் மீனா வெமுரி நடுத்தர வயதில் இருக்கும் இவர் மூத்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சீரியலில் கிடைத்த வாய்ப்பு பெரிதாக உள்ளது. நிறைய பேர் திட்டுகிறார்கள்.
அதற்கு காரணம் தன்னுடைய கேரக்டர் தான் என்றும், இந்த மாதிரி ஒரு மாமியார் கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைக்கும் போது இப்படி மாறிட்டீங்களே என பலரும் கேட்டு வருவதாகவும், நான் என்னம்மா பண்றது டைரக்டர் தானே முடிவு பண்ணனும் என்று அவர்களிடம் தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஈரமான ரோஜாவே செட்டு ரொம்ப ஜாலியா இருக்கும் எல்லோரும் என்னை ஓட்டு வாங்க நான் எல்லாத்தையும் ஜாலியா தான் எடுத்துப்பேன். என்னை தூக்கி நடுவில் வைத்து தான் எல்லோரும் ஓட்டுவாங்க… ஆனால், எனக்கு கோபமே வராது. சில நாட்களில் ஷூட்டிங் தேதி திடீரென மாற்றுவார்கள் அப்போது வேறு ஒரு திட்டம் வைத்திருப்போம், அது பாதிக்கப்படும் போது மட்டும் தான் கோபம் வரும் மற்றபடி எனக்கு கோபம் வராது. இவங்க கோபப்படுவாங்களா என்று கேட்கும் அளவிற்கு கோபம் வந்துரும்.
துறை ரீதியாக நான் கஷ்டப்படவில்லை. வாழ்க்கையில், தான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். மீடியாவுக்குள் வந்த பிறகுதான் எந்த இடத்தில் புள்ளி வைக்க வேண்டும் எப்போ இயல்பா இருக்கணும், எப்போ பதில் தரணும் என்பதை புரிந்து கொண்டேன்.
எட்டு ஆண்டுகளாக நடித்து வருகிறேன். யாரும் என்னிடம் நேரடியாக அட்ஜஸ்மென்ட் கேட்டதில்லை. ஆனால், தொலைப்பேசியில் சில அழைப்புகள் வரும் மேடம் அந்த படத்தில் உங்களுக்கு வாய்ப்பு இருக்கு, நீங்க….. என்று ஆரம்பிப்பார்கள் ஆரம்பித்ததே நான் சொல்லிவிடுவேன், இந்த அட்ஜஸ்ட்மெண்ட் மாதிரியான விஷயத்துக்கு எல்லாம் என்னை கூப்பிடாதீங்க என்று சொல்லிவிடுவேன். இல்லை மேடம் அதை சொல்ல வரலை என்று சொல்வார்கள். அடுத்து அவர்களிடம் இருந்து போன் வராது. பிரச்சனை வருவதற்கு முன்பே நான் நிறுத்தி விடுவேன்.
ஒரு சமயத்தில், என்னுடைய காரை தெருவில் இருந்து வெளியே எடுக்கும்போது ஒருவன் என்னை பின்னால் பாலோ செய்து வந்ததான். என் காரின் அருகில் நிறுத்தி நான் இறங்க முடியாத அளவுக்கு காரை நிறுத்தினான். நான் கத்தினேன் அவன் கேட்கவே இல்லை. தெருவில் சென்றவர்கள் எல்லாம் சொல்லித்தான் நகர்தினான். இறங்கியதும் அவனை அடி பின்னீட்டேன். அவ்வளவு கோபம் வந்தது. எனக்கு உயிர் பயம் காட்டிட்டான்.
இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ போட்டால் கூட அநாகரீகமான கமெண்ட்ஸ் நிறைய வரும். ஆபாசமா வரும், அந்த மாதிரி கமெண்ட்ஸ் எல்லாம் நீக்கிடுவேன். இதுக்கு முன்னாடி ஷிப்ட்ல வேலை பார்த்தேன். டார்க்கெட், டார்ச்சர் பண்ணுவாங்க அந்த வேலை போயிருச்சு. அதனால்தான் சீரியல் பக்கம் வந்தேன். இங்கே அந்த பிரச்சினையில்லை. ஆனால், வேறு மாதிரியான பிரச்சினை இருக்கு காலை 7 மணிக்கு ஷூட்டிங் என்று சொல்லுவாங்க அடிச்சு பிடிச்சு போவேன்.
காலையிலிருந்து நைட்டு வரை ஒரு நாள் முழுக்க சூட் இல்லாமல் உட்கார வச்சிருவாங்க, அதிகபட்சம் ஒரு மணி நேரம் தூங்கலாம். அதுக்கு மேல உட்கார்ந்து தான் இருக்க முடியும். இரவு எட்டு மணிக்கு கூப்பிட்டு பேருக்கு ஒரு ஷாட் எடுப்பாங்க, அப்பவும் அனுப்ப மாட்டாங்க பேப்பர் வரட்டும் இருங்கன்னு சொல்லிடுவாங்க.. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா என உதவி இயக்குனர்களை கேட்டு இருக்கேன்.
இரவு 9 மணிக்கு தான் முடிச்சு அனுப்புவாங்க இது ஒன்றுதான் கஷ்டமா இருக்கும். ஆனால், இது தினமும் இருக்கும் இப்போ அதுவும் பழகிடுச்சு. அவங்களையும் குறை சொல்ல முடியாது, ஏன்னா அது அவங்களுக்கே தெரியாது என்று மீனா வெமுரி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.