ஒரு வேல அப்படி இருக்குமோ.. ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் இணைந்த பாரதி கண்ணம்மா நடிகர்..!

Author: Vignesh
6 February 2023, 11:29 am

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வரும் காவியா, பார்த்திபன் ஒன்று சேர முடியாமல் தவித்து வரும் சூழ்நிலையில் இப்பொழுது காவியா காதலித்த விஷயம் மாமனார் அருணாச்சலத்திற்கும் தெரிய வர இதனால் மன வருதத்தில் உள்ளார். மேலும் காவியாவின் நிலைமையை நினைத்து மன வருத்தப்பட்டு கொண்டுள்ளார்.

eeramana rojave - updatenews360

மேலும், மாமியார் பார்வதி இப்பொழுதும் கொஞ்சம் கூட திருந்தாமல் காவியாவை வீட்டை விட்டு அனுப்புவதிலேயே குறியாக இருந்து வருகிறார். பார்த்திபனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தால் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்பில் சீரியல் பிரியர்கள் உள்ளனர்.

eeramana rojave - updatenews360

இப்படி ஒரு நிலையில், இப்பொழுது அருண் ஈரமான ரோஜாவே சீரியல் குழுவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது ஒருவேளை ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படமாக இருக்குமோ? அல்லது அப்படி இல்லையென்றால் பாரதி எதுவும் இந்த சீரியலில் களமிறங்க இருக்கிறாரோ என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ