நான் உயிரோட இருக்க காரணம் என் மனைவி தான்…நடிகர் சிவராஜ்குமார் உருக்கமாக பேசிய வீடியோ வைரல்..!

Author: Selvan
1 January 2025, 9:51 pm

புற்றுநோயில் இருந்து மீண்ட சிவராஜ்குமார்

கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு சமீபத்தில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.இதனால் ஒட்டுமொத்த திரைஉலகம் அதிர்ச்சியாகி அவருக்காக பிரார்த்தனைகளை பண்ணி வந்தனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ்குமார் என்னுடைய அறுவைசிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மியான்மர் கேன்சர் இன்ஸ்டிடியூட் செல்ல இருக்கிறேன், என்னுடன் என்னுடைய மனைவியும்,மகளும் துணைக்கு வருகின்றனர்.

Shivrajkumar and wife Geetha emotional message

மேலும் அறுவைசிகிச்சை செய்ய உள்ள மருத்துவரையும் குறிப்பிட்டு,முதலில் புற்றுநோய் இருப்பது உறுதியாக உடனே நான் பயந்தேன்,பின்பு மருத்துவரும் என்னுடைய மனைவியும் எனக்கு நம்பிக்கை அளித்து ஆறுதல் கூறினார்கள் என்று தெரிவித்திருப்பார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது என மருத்துவர் ஒரு வீடியோவில் குறிப்பிட்டு அவர் ஒரு மாத காலம் இங்கே தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என கூறியிருப்பார்.

இதையும் படியுங்க: “விடாமுயற்சி”விலகலால் பொங்கலுக்கு போட்டி போடும் சிறிய படங்கள்…முந்திக் கொண்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இந்த சூழலில் சமீபத்தில் சிவராஜும் அவரது மனைவியும் அமெரிக்காவில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.அதில் நான் முழுமையாக புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துவிட்டேன்,எனக்காக பிரார்த்தனை செய்த அணைத்து மக்களுக்கும் நன்றி கூறி,என் மனைவி கீதா மட்டும் எனக்கு இல்லையென்றால் இந்த சிவாண்ணா கிடையாது, கீதா எனக்கு எப்போவுமே ஒரு சிறந்த மனைவியாக எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

இந்த புற்றுநோய் சிகிச்சையில் இருந்த போது என்னை மிகவும் அன்போடு பார்த்துக்கொண்டார்.மேலும் என்னுடைய மகள் நிவேதிதா என் அருகில் எப்போதும் இருந்து என்னை கவனித்துக்கொண்டார் என உருக்கமாக பேசியிருப்பார்

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 72

    0

    0

    Leave a Reply