சென்னை சர்வேதேச திரைப்பட விழாவில் சைந்தவி செய்த நெகிழ்ச்சியான செயல்
தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பத்திற்காக ஒருவையொருவர் பிரிந்து வாழ்கின்றனர்.
அந்தவகையில் பிரபல நட்சத்திரங்களான ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் தனித் தனியே வாழ்கின்றனர்.சமீபத்தில் மலேசியாவில் நடந்த இசை விழாவில் இருவரும் ஒரே மேடையில் பாடலை பாடி ரசிகர்களை கவர்ந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் 22வது சர்வதேச திரைப்பட விருது விழா சென்னையில் நடைப்பெற்றது.அதில் பங்குபெற்ற சைந்தவி,ஜி வி பிரகாஷ் இசையில் வெளிவந்த “உன்னாலே என் ஜீவன்” வாழுதே பாடலை பாடினார்.
இதையும் படியுங்க: தளபதி 69வது படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு… பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம்!!
அதன்பின்பு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜி வி பிரகாஷ் அமரன் திரைப்படத்திற்காக வாங்கினார்.அப்போது மேடையில் அமர்ந்திருந்த சைந்தவி,ஜி வி பிரகாஷ் விருது வாங்கி,கீழே இறங்கும் வரை தொடர்ந்து கைத்தட்டி கொண்டே இருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் மீண்டும் இணைந்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.