ஏ.ஆர்.ரஹ்மானை பிரிகிறேன்..சாய்ரா பானு அறிக்கை : அதிர்ச்சியில் திரையுலகம்….!

Author: Selvan
20 November 2024, 9:29 am

திரையுலகின் இசை ஜாம்பவானாக திகழ்பவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹமான்.இவருடைய மனைவி சாய்ரா பானு விவாகரத்து முடிவை நேற்று அவருடைய வழக்கறிஞர் சமூக வலைத்தளத்தில் வெளியீட்டு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள் ஆக்கினார்.

AR Rahman Divorce News

29 வருட திருமண உறவு முறிந்த தருணம்

அதில் அவர்கள் எங்களுக்குள் எவ்ளோ காதல் இருந்தாலும் நாங்க ஒன்றாக இருக்க முடியவில்லை.29 வருட திருமண உறவில் எங்கள் இருவருக்கும் தனிப்பட்ட இடைவெளி இருந்து கொண்டே இருந்தது. இந்த விவாகரத்து முடிவு அவர்களின் உறவில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி அழுத்தத்திற்குப் பிறகு வருகிறது.

இதையும் படியுங்க: தெலுங்கு பட ரீமேக்தான் தளபதி 69 கதை… இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலா..!!

இந்த நேரத்தில் இரு தரப்பினரும் பாலம் கட்ட முடியாது என்று நினைக்கிறார்கள். வலி மற்றும் மன வேதனையுடன் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக திருமதி சாய்ரா பானு வலியுறுத்தினார். திருமதி சாய்ரா தனது வாழ்க்கையில் இந்த கடினமான சூழ்நிலையை கடக்கும்போது , பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய தனிப்பட்ட முடிவை கொஞ்சம் மதித்து மரியாதை கொடுக்கும்படி அதில் குறிப்பிட்டுள்ளார் .

  • kamal haasan ott streaming after 8 weeks கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?