முன்பதிவில் சூர வசூல்…மரண சம்பவ காட்டும் மோகன்லாலின் ‘எம்புரான்’.!
Author: Selvan25 March 2025, 3:33 pm
முன்பதிவில் சாதனை படைக்கும் எம்புரான்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பிருத்விராஜ், இயக்குனராகவும் சாதித்து வருகிறார்,அந்த வகையில் அவருடைய முதல் இயக்கத்தில் வெளிவந்த ‘லூசிபர்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.
இதையும் படியுங்க: ரத்தத்தில் சிலை…கொடூர வலி…ஷிகான் ஹுசைனி மரணத்தின் பின்னணி.!
இப்படத்தின் பிறகு மீண்டும் நடிப்பில் முழு கவனம் செலுத்திய அவர் ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார்.

கோவிட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நீண்ட காலம் தாமதமானது. கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் ‘எம்புரான்’ திரைப்படம் மார்ச் 28,2025 அன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இதனால் பாடத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே உலகளவில் முதல் வார இறுதிக்கான முன்பதிவு வருவாய் 58 கோடி ரூபாய் வரை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒரு மலையாளத் திரைப்படத்துக்கு இதுவரை கிடைத்திராத மிகப்பெரிய வரவேற்பாக கருதப்படுகிறது.
இதனால், ‘எம்புரான்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி வசூலில் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
