நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எம்புரான் படம் இந்திய சினிமாவின் பல சாதனைகளை முறியடித்து வரலாறு படைத்துள்ளது.மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ப்ரித்விராஜ்,தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமாக உள்ளார்.
இதையும் படியுங்க: முடி வெட்ட ஒரு லட்சமா..யார் இந்த ‘ஆலிம் ஹக்கீம்’…காத்திருக்கும் பிரபலங்கள்.!
ப்ரித்விராஜ் நடிகராக மட்டுமல்ல,இயக்குநராகவும் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 2019-ம் ஆண்டு வெளியான லூசிபர் திரைப்படம் அவருக்கு இயக்குநராக மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.இந்த படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதன் தொடர்ச்சியாக,தற்போது எம்புரான் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இதில் மோகன்லால்,ப்ரித்விராஜ்,மஞ்சு வாரியர்,டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம்தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 27-ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படத்திற்கான முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் புக் மை ஷோ இணையத்தளத்தில் 96,140 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.இது இந்திய சினிமாவில் இதுவரை எந்தப் படத்திற்கும் கிடைக்காத வரவேற்பை எம்புரான் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு லியோ 82,000 முன்பதிவு டிக்கெட்டை சாதனையாக இருந்தது,தற்போது இந்த சாதனையை எம்புரான் முறியடித்துள்ளது.மேலும் உலகளவில் இப்படத்தின் முன்பதிவு வருமானம்12 கோடியைத் தாண்டியுள்ளது.
இதனால் இப்படம் முதல் நாளில் உலகளவில் 40 முதல் 50 கோடி வரை வசூலிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபலங்களின் ஹேர் ஸ்டைலிஸ்ட் சாதாரண ஹேர் கட்டிங்கிற்கு 20 ரூபாய் வசூலித்தவர்,இன்று ஒரு ஹேர் கட்டிங்கிற்கு 1 லட்சம் ரூபாய்…
ஐபிஎல் 2025 – புதிய சீசன்,புதிய விதிகள் இந்திய பிரீமியர் லீக் 2025-ம் ஆண்டின் 18-வது சீசன் நாளை (மார்ச்…
இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களைவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி திணிப்பு என கூறி மும்மொழிக் கொள்கையை…
உம்மிடி கிரிட்டிஸுக்கு எதிராக சிபிஐ வழக்கு தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் சில ஆண்டுகளாக…
பழனியை தனி மாவட்டமாக உருவாக்கும் முனைப்பில் அமைச்சர் சக்கரபாணி இருப்பதாக வெளியான தகவலுக்கு, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர்: திண்டுக்கல்…
This website uses cookies.