பாக்கியலட்சுமி சீரியலுக்கு END CARD.. வெளியானது புதிய ப்ரோமோ!!
Author: Udayachandran RadhaKrishnan20 February 2025, 10:56 am
மெகா சீரியலுக்கு இல்லத்ரசிகர்கள் அடிமை. இதனால் தமிழில் உள்ள பிரபல சேனல்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அத்தனை சேனல்களும் சீரியலை ஒளிபரப்பி வருகிறது.
இதையும் படியுங்க : தமிழில் பாடுவது சிரமம்தான்.. பிரபல பாடகி பேச்சு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
முடிவுக்கு வருகிறது பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் பல வருடமாக ஓடிக்கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். சுசித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சீரியலில், கோபி மற்றும் ராதிகா விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதால் இந்த சீரியல் நிறைவுக்கு வருவதாக கூறப்படுகிறது.
அதை உறுதி செய்யும் விதமாக புது சீரியலில் சுசித்ரா கமிட்ஆகியுள்ளார். சிந்து பைரவி என்ற கன்னட சீரியலில் அவர் நடித்துள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது. சன் நெட்வொர்க்கின் கன்னட சேனலில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.