நடிகை தமன்னா விரைவில் கைது? அமலாக்கத்துறை விசாரணையில் கிடுக்குப்பிடி.. என்ன நடந்தது?

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2024, 11:20 am

நடிகை தமன்னாவிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Fairplay என்ற செயலி கிரிக்கெட் போன்ற பல விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலி.

மகாதேவ் ஆன்லைன் செயலியின் துணை செயலியாக இது உள்ளது,. இந்த செயலியை துபாயை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் உருவாக்கினார்.

இந்த செயலி மீது பணமோசடி வழக்கை பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு வருடமாக விசாரித்து வரும் நிலையில், Fairplay விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார்.

tamannaah bhatia arrest

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை சட்டவிரோதமாக Fairplay செயலியில் ஒளிபரப்பு செய்ய தமன்ன உதவியதால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாகாம் நிறுவனம் புகார் கூறியிருந்தது.

இந்த விவகாரத்தில் சைகர் கிரைம் போலீசார் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனா. பின்னர் அமலாக்கத்துறை 2வது முறையாக சம்மன் அனுப்பியது.

இதையும் படியுங்க: பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த அமைச்சரின் உதவியாளர் : வீடியோ லீக்.!!

நேற்று மதியம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் சுமார் 5 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஆனால் விசாரணைக்கு பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த விவகாரம் அமலாக்கத்துறை கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .

  • Director Shankar Dayal passes away “சகுனி” பட இயக்குனர் திடீர் உயிரிழப்பு…சோகத்தில் உறைந்த திரையுலகம்..!
  • Views: - 363

    0

    0