எவன் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணா உனக்கு என்ன?..- சீரிப்பாய்ந்த அயலி WEB SERIES நடிகை..!

Author: Vignesh
29 May 2023, 5:34 pm

சினிமாவை பொருத்தவரையில் நடிகைகள் மற்றும் நடிகர்கள் வாய்ப்பு தேடி செல்லும் போது அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையை சந்தித்து வருவது தற்போது வாடிக்கையாகி விட்டது. ஆனால், குறிப்பாக நடிகைகள் மட்டுமே இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், நடிகைகள் பேட்டியில் கலந்து கொண்டால் போதுவாக கேட்கப்படும் கேள்வி அட்ஜெஸ்ட்மெண்ட் உங்களுக்கு நடந்து இருக்கா என்ற கேள்வி அனைத்து நடிகைகளின் பேட்டிகளிலும், முன் வைக்கப்படுகிறது.

ayali-updatenews360

இந்நிலையில், ஒரு சீரியல் நடிகையிடன் இந்த கேள்வி கேட்கப்பட்டதால் சரமாரியாக சாடி இருக்கிறார். அதாவது அயலி மற்றும் பிரபல சீரியலான எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி ரோலில் நடித்து வரும் நடிகை காயத்ரி கிருஷ்ணன் தான் அது.

நடிகை காயத்ரி கிருஷ்ணனின் சமீபத்திய பேட்டியொன்றில் தன்னிடம் கேட்கப்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் கேள்விக்கு வெளிப்படையாக பதில் கொடுத்து இருக்கிறார். அதில், எவ, எவன் கூடயோ அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துவிட்டு போறாள், உங்களுக்கு என்ன வந்துச்சு என்று தெரிவவித்து நடிகை காயத்ரி கிருஷ்ணன் ஆவேசப்பட்டுள்ளார்.

ayali-updatenews360

மேலும் அட்ஜெஸ்ட் செய்து நடிக்கிறா, இல்லன்னா வீட்டுக்கு போறா, அது அவளோட தனிப்பட்ட விருப்பம் என்றும், இதுல உங்களுக்கு என்னடா பிரச்சனை என்றும் நடிகையை பார்த்தாலே இந்த கேள்வியை தான் உங்களுக்கு கேட்கத்தோணுமா, அப்படி கேட்டால் கண்ணீரோடு பதில் சொல்லனுமா என்று கிழுத்து தொங்க விட்டு இருக்கிறார் நடிகை காயத்ரி கிருஷ்ணன்.

மேலும், இதையெல்லாம் கேட்டு நடிகைகளை மனதாலும் உடம்பாலும் சாவடிக்காதீங்க என்ற கருத்தையும் நடிகை காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 498

    0

    0