3 வேளையும் ஊறுகாய் மட்டுமே உணவு… மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மறுபக்கம்!!
Author: Vignesh8 September 2023, 4:45 pm
மாரிமுத்துவுக்கு 56 வயதாகிறது. இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர். ஆரம்பத்தில் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக சேர்ந்தார். இயக்குநர்கள் வசந்த், ராஜ்கிரண், சீமான், மணிரத்தினம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயத்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. இவர் அரண்மனை கிளி, என் ராசாவின் மனசிலே படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். ஆசை உள்ளிட்ட படங்களிலும் இயக்குநர் வசந்திற்கு உதவி இயக்குநராக இருந்தார்.
கோபத்தில் அவர் பேசும் டயலாக்குகள் சிரிப்பை வரவழைக்கும். அவருடைய உடல் மொழியே மொத்த டயலாக்கையும் பேசும். அந்த அளவுக்கு தத்ரூபமாக நடித்திருப்பார். இவர் இயக்குநரும் கூட. பூவே உனக்காக, ஆசை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்துள்ளார்.
இவர் இந்த சீரியலில் பேசும் ஏய் இந்தாம்மா எனும் டயலாக மிகவும் பிரபலம். பெண்ணடிமைத்தனம் செய்யும் இவரது இந்த கேரக்டரை பார்த்தாலே எந்த பெண்ணும் இது போல் ஒரு கணவர் வரக் கூடாது என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவுக்கு வில்லன்களிலேயே கொடூரமான வில்லனாக விளங்கினார் ஆதி குணசேகரன். இந்த இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என்கிறார்கள்.
மாரிமுத்து டப்பிங் பேசும் போது மயக்கம் வருவது போல உணருவதாக சக நடிகரான கமலேஷிடம் (ஞானசேகரன் கதாபாத்திரம்) கூறியுள்ளார். சரி வெளியே சென்று காற்று வாங்கிவிட்டு வருவதாக சொன்ன அவர், அங்கிருந்து தனது காரை எடுத்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
நடிகர் கமலேஷ், வெளியே சென்று பார்த்த போது நடிகர் மாரிமுத்து இல்லை என்பதால் உடனே அவருடைய மகளை தொடர்பு கொண்டுள்ளார். அவரது மகளோ, மருத்துவமனைக்கு வர சொல்லியுள்ளார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற பின்பு தான் எங்களுக்கே அதிர்ச்சி காத்திருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது என கண்ணீர் வர தேம்பி தேம்பி நடிகர் கமலேஷ் இதை கூறினார்.
இதனிடையே, எதிர்நீச்சல் சீரியல் தவிர்க்க முடியாத நடிகராக இருந்த இவரின் முழு கதையை கேட்டால் கண்ணீரை வந்துவிடும். ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், அவர் தனது முந்தைய வாழ்க்கையை பற்றி பேசி இருக்கிறார். தான் தேனியில் இருந்து சென்னைக்கு வந்த சமயத்தில் ஒரு மேன்ஷனில் தங்கி இருந்ததாகவும், அங்கிருந்தபடியே ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி வேலை தேடி சென்றதாகவும், அப்போது தன்னிடம் காசு இல்லாத நேரத்தில் தன் நண்பர்களிடம் கேட்டு பெற்றுக் கொண்டதாகவும், ஒரு முறை தீபாவளி பண்டிகை வந்தது எனது அறையில் இருந்தவர்கள் அனைவரும் ஊருக்கு சென்று விட்டனர்.
ஊருக்கு போக கூட காசு இல்லாத நிலையில், அறையிலேயே தங்கி விட்டேன். அந்த சமயத்தில் பசித்தது வழக்கம் போல அக்கவுண்ட் வைத்து சாப்பிட ஹோட்டலுக்கு சென்றேன். அங்கு ஒரு பெரிய பூட்டு தொங்கியது. உடனே வேறு ஹோட்டலில் சாப்பிடலாம் என நினைத்தபொழுது காசு இல்லை சரி மற்ற அறைகளில் இருக்கும் நண்பர்களிடம் வாங்கிக் கொள்ளலாம் என போனபோது, அவர்கள் எல்லோருமே தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு சென்று விட்டார்கள்.
பசி வயிற்றை கிள்ளியது என்ன செய்வது என்று தெரியவில்லை. அறையில் ஏதாவது உலர் உணவுகள் இருக்கிறதா என பார்த்தேன் ஒன்றுமே இல்லை. ஒரு ஊறுகாய் பாட்டில் மட்டுமே இருந்தது. வேறு வழியில்லாமல் ஊறுகாயை நக்குவது அதன் காரணத்தை குறைக்க ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது. இப்படியே, மூன்று வேளையும் மூன்று நாட்களுக்கு செய்தேன். பிறகு நாலாவது நாள் எனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தேன். அதற்குள் நண்பர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். இப்படித்தான் ஒரு காலகட்டத்தில் கஷ்டப்பட்டேன் என தனது கதையை கூறி மாரிமுத்து வருத்தப்பட வைத்தார்.