அடுத்தடுத்து விலகிய நடிகர்கள்…எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த மிகப்பெரிய சிக்கல்…!
Author: Selvan17 December 2024, 12:58 pm
மாபெரும் மாற்றங்களுடன் களமிறங்கும் எதிர்நீச்சல் 2
தமிழக ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. முதல் சீசனில் கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் ஒளிபரப்பான எதிர்நீச்சல், மாரிமுத்து உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பால் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்தது.
மாரிமுத்துவின் மரணத்தால்,வில்லன் கதாபாத்திரத்தில் வேலு ராமமூர்த்தி சேர்க்கப்பட்டாலும், அவரது நடிப்பு ரசிகர்களை ஈர்க்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
எதிர்நீச்சல் முதல் பாகத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த மதுமிதா, இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை.அவருக்கு பதிலாக பார்வதி எனும் புதிய நடிகை ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இதையும் படியுங்க: கைதுலாம் சும்மா.. அசால்ட்டு காட்டும் அல்லு அர்ஜுன்!
முதலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த வேலு ராமமூர்த்தி, இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை.அவருக்கு பதிலாக மற்றொரு நடிகர் அறிமுகமாக உள்ளார்.
அதே மாதிரி முதல் பாகத்தில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்த சத்யா, தற்போது விஜய் டிவியின் “தனம்” சீரியலில் நடித்து வருகிறார்.இதனால் அவரும் நடிக்க மாட்டார் என்ற தகவலும் வந்துள்ளது.குழந்தை தாராவாக நடித்த ஃபர்சானா, இரண்டாம் பாகத்தில் விலகியுள்ளார்.அவருக்கு பதிலாக பிரஜானா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தனை மாற்றங்களுடன் வரும் எதிர்நீச்சல் 2 ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.