விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
Author: Selvan22 December 2024, 12:15 pm
எதிர்நீச்சல்-2 வில்லியாக நடிக்கும் ரோகினி
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல் சீரியலின் அடுத்த பாகம் விரைவில் தொடங்கப்படும் என சன் டிவி அறிவித்துள்ளது.
இந்த சீரியலில் முன்னதாக நடித்த பலர் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை.இதனால் புதிதாக பலர்,இந்த பாகத்தில் நடிக்க உள்ளனர்.முதல் சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இறந்த நிலையில் அவருக்கு பதிலாக வேலு ராமமூர்த்தி நடித்து வந்தார்.
அவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவரவில்லை என்ற கருத்துக்கள் உலா வந்தன.
இதையும் படியுங்க: அடுத்தடுத்து விலகிய நடிகர்கள்…எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த மிகப்பெரிய சிக்கல்…!
இதனையடுத்து சீரியலின் டீ.ஆர்.பி-யும் குறைந்தது.இதனால் பல மாற்றங்களுடன் களம் இறங்க போகும் எதிர்நீச்சல்-2 சீரியலில் முக்கிய தகவல் வந்துள்ளது.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலின் வில்லி ரோகினி,தற்போது எதிர்நீச்சல்-2 சீரியலில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இவர் பல சீரியல்களில் வில்லியாக நடித்து மக்களை கவர்ந்துள்ள நிலையில்,இதிலும் இவருடைய ரோல் வில்லியாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது