இளம்பெண் போட்டோவிற்கு இப்படி ஒரு கமெண்ட் செய்த மாரிமுத்து..? கலாய்க்கும் நெட்டிசன்கள்.
Author: Rajesh26 February 2023, 8:30 pm
மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். அப்பா-மகள் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை எடுத்துரைக்கும் கதை. மதுரையில் கூட்டு குடும்பமாக வாழும் குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியே வருகின்றனர். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வருகிறார்கள். அவர்களை எதிர்த்து அந்த பெண்கள் எப்படி போராடுகிறார்கள் என்பதே இந்த சீரியலின் கதை.

இந்த தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வில்லனாக மிரட்டி வருபவர் மாரிமுத்து. இவர் இதற்கு முன்பே வெள்ளி திரையில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். ஆனால், இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருப்பது எதிர் நீச்சல் தொடர் மூலம் இருப்பது தான் “எதிர் நீச்சல்” சீரியல் மூலம் தான்.
கடந்த சில நாட்களாக ‘இந்தாம் ஏய்’ என்ற மாரிமுத்துவின் டயலாக் ட்ரெண்ட் ஆனது மூலம் சமூக வலைத்தளத்தில் trending ஆகியுள்ளார். இப்படி trending ஒரு நிலையில் இவர் சமூக வளைத்ததில் கேலிக்கு உள்ளாகி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் பக்கம் ஒன்றில் அழகான பெண்ணின் புகைப்படம் ஒன்று போட்டு ‘can i call you’ என்று குறிப்பிடபட்டு இருந்தது.
இந்த பதிவிற்கு கீழ் மாரிமுத்து என்ற பெயருடைய ட்விட்டர் கணக்கில் இருந்து Yes என்று பதிவிட்டு ஒரு போன் நம்பரும் போடப்பட்டு இருந்தது. இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் சீரியலில் மட்டும் ஸ்ட்ரிக்ட்டான நபராக இருந்துவிட்டு இப்படி ட்விட்டரில் வழிந்துகொண்டு இருக்கிறார் என்று கேலி செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் காஜல் பசுபதி கூட இந்த பதிவை தனது முகநூலில் பகிர்ந்து Lol என்று கேலி செய்து இருக்கிறார். மேலும், இது மாரிமுத்துவின் போன் நம்பர் தான் என்றும் true callerல் இந்த நம்பரை போட்டு ஆதாரத்தை எல்லாம் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஆனால், உண்மையில் போட்டு மாரிமுத்துவின் ட்விட்டர் கணக்கில் இருந்து போடப்பட்ட பதிவு தானா என்பது தெரியாமல் பலரும் கேலி செய்து வருகின்றனர். அதே போல, தற்போது இந்த ட்விட்டர் பதிவு வைரலான பின்னர், மாரிமுத்து பெயரில் இருந்த அந்த குறிப்பிட்ட ட்விட்டர் கணக்கு டெலிட் செய்யப்பட்டு இருக்கிறது.