ரத்த வெள்ளத்தில் போலீஸ்காரர்.. விபத்திற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா போட்ட பதிவு..!
Author: Vignesh28 February 2024, 12:40 pm
பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் அடக்கமான பெண்ணாக நடித்து வருபவர் தான் மதுமிதா.
இவருக்கென தமிழில் பல ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று சொல்லலாம். தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்து வரும் ஜனனி அதில் முத்த காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் எதிர்நீச்சல் ஜனனியா இது என்று அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இதுபோன்ற நெருக்கமான காட்சிகளில் நடித்ததற்கு விமர்சனமும் செய்து வந்தனர்.

இதனிடையே, தற்போது மதுமிதா ஆண் நண்பருடன் மதுபோதையில் அதுவும் ராங் ரோட்டில் சென்று எதிரே வந்த காவல்துறை வண்டியின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்த இடத்திற்கு வந்த போலீசார் உடனே அடிபட்ட போலீசை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, இந்த செய்தி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி வரும் நிலையில், மதுமிதாவிடம் தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், மதுமிதா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், அவர் என்னைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு நான் நலமுடன் இருக்கிறேன். செய்திகளில் வரும் தவறான செய்திகளை நம்பாதீர்கள் என்று பதிவு செய்துள்ளார்.