ஏன்டா நடிச்சோம்னு இருக்கு.. எதிர்நீச்சல் சீரியல் குறித்து புலம்பித் தள்ளிய பிரபலம்..!

Author: Vignesh
15 June 2024, 4:35 pm
ethir neechal
Quick Share

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், சீரியல் ஒன்றிக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். அதன் பின்னர் அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பாரம்பரிய முறைப்படி உறவினர்கள் முன்னைலையில் உடல் தகனம் செய்தனர்.

vela ramamoorthy

இந்நிலையில், டிஆர்பியின் உச்சத்தில் இருந்த எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. மாரிமுத்துவின் மறைவிற்குப் பின்னர் அந்த ரோலில் வேல ராமமூர்த்தி நடித்திருந்தார். ஆனால், அவரின் நடிப்பு மாரிமுத்து அளவுக்கு இல்லை என்பதுதான் பலரது விமர்சனமாக இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வேலராமமூர்த்தி சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் டிஆர்பி உச்சத்தில் இருந்த எதிர்நீச்சல் சீரியல்தான். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்தது. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமலே சென்று கொண்டிருந்தது. ஆனால், இந்த சீரியலில் ஏன் தான் நடிச்சமோ என்றுதான் இப்போது வரை எனக்கு தோன்றுகிறது. மிகப்பெரிய அவமானமாகவே இந்த சீரியலில் நடித்ததை நான் பார்க்கிறேன். ஏனென்றால், ரசிகர்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை என்று வேளராமமூர்த்தி வெளிப்படையாக பேசியுள்ளார்.

Views: - 76

0

0

Leave a Reply