இனிமேல் விஜய் கூட படம் பண்ண முடியாது – காரணத்தை கறாரா கூறிய இயக்குனர் சேரன்!

Author: Shree
23 October 2023, 1:49 pm

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனரான சேரன் 2000ம் ஆண்டு வெளியான கொடி என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை துவங்கினார். அதையடுத்து இவர் இயக்கிய ஆட்டோகிராப் என்ற படம் 2004ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர்.

அடுத்ததாக தவமாய் தவமிருந்து படம் இயக்கி பட்டிதொட்டி எங்கும் கவனத்தை ஈர்த்தார். இத்திரைப்படம் தேசிய விருதுபெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சொல்ல மறந்த கதை , பொக்கிஷம் போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். அற்புதமான படங்களை இயக்கி மிகச்சிறந்த இயக்குனராக பெயர் எடுத்து சேரனின் படைப்புகளும் படைப்பாற்றலும் மிகத் துல்லியமாக கருத்துரை எடுத்துரைக்கும்.

இதனிடையே இவர் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். அந்நிகழ்ச்சியில் மூலம் அவப்பெயர் , வீண் வெறுப்பு, வீண் பழி உள்ளிட்டவற்றை பெற்று வெளியேறினார். அந்த சமயம் கே. எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல இயக்குனர்கள் அவருக்கு ஆதரவாக பேசினார்கள்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய் வைத்து படம் எடுப்பீர்களா? என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, இல்லை…. விஜய் வைத்து இனிமேல் படம் எடுக்கமுடியாது. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அவரது நிலை ரொம்ப உயர்ந்திடுச்சு. இப்போ படம் எடுக்கணும்னா அவருக்காக கதையை மாற்றனும். அது இல்லாமல் பிசியாக இருக்காரு. கண்டிப்பா ஒரு 10 வருஷத்துக்கு டேட் கிடைக்காது என சேரன் அந்த பேட்டியில் கூறினார். இதை வைத்து பார்க்கும்போது சேரனுக்கு விஜய் மீது ஏதோ ஒரு மனஸ்தாபம் இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 593

    0

    2