கடைசியில் கழிவறை கழுவும் வேலை கிடைச்சாலும் பண்ண தயாரா இருந்தேன் : மனம் நொந்து பேசிய உச்ச நடிகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2023, 5:32 pm

சினிமாவில் பலர் வருகிறார்கள், பலர் காணாமல் போகிறார்கள். இது சாதாரணமான ஒன்று தான் என்றாலும், சிலர் விடா முயற்சி காரணமாக உச்சத்திற்கு வருவதுதான் ஆச்சரியமாக இருக்கும்.

அப்படித்தான் தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர், நடிகைகள் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் பின்னர் உயர்ந்திருக்கிறார்கள்.

அதில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், பின்னர் உச்ச நடிகர் அந்தஸ்தை பெற போராடி வந்தவர்.

நடிப்பின் கலையின் பல்கலைக்கழகம், உலகநாயகன் என போற்றப்படக் கூடிய கமல், ஆரம்பத்தில் தனக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்துள்ளார் கமல். அப்போது அவருடைய தாயாரிடம், நீங்க சொன்னது போலவே நான் விளங்காம போயிருவனோனு தோணுது மா என கூறியுள்ளார்.

அதற்கு அவரது தாய், நீ எந்த வேலையா இருந்தாலும் பண்ணு, கக்கூஸ் கழுவறதா இருந்தாலும், அதில் உன்ன மாதிரி வேற யாரும் சிறந்தவன் இருக்கக் கூடாது என கூறியுள்ளார்.

இதன் பின்னர் தான், படத்தை தேர்ந்தெடுத்து தனக்கு எது வருமோ அதை செய்து நடித்து காட்டி இவ்ளோ உயரத்துக்கு வந்துள்ளேன் என கூறியுள்ளார்.

  • shakeela talks shruthi narayanan video that is original video அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…